Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

வனிதா விஜயகுமார் வெளியிடப்போகும் ரகசியங்கள்!

Vanitha vijayakumar issue - latest news

ஸ்ரீதேவியின் திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்காமல் விஜயகுமார் திண்டாடினார் ; அந்த கதையை வெளியே சொன்னால் வெட்கக் கேடு என்று அவரது மூத்த மகள் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். குடிபோதையில் தன்னை அடித்து உதைத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். தனது நியமான புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் விஜயகுமார் வீட்டு ரகசியங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வெளியே சொல்வேன் என்று கூறி விஜயகுமாருக்கு செக் வைத்திருக்கும் வனிதா, தனது தந்தை மீதும் அவரது குடும்பத்தார் மீதும் கூறும் குற்றச்சாட்டுக்கள் வருமாறு:-

* கடந்த 7ம்தேதி குழந்தைகளை அழைத்து வருவதற்காக வீட்டிற்கு சென்ற போது, அப்பா விஜயகுமார் நன்றாக குடித்திருந்தார்.

* பெற்ற மகள் என்றுகூட பார்க்காமல் குடி‌போதையில் அசிங்கமாக பேசி, என்னை பிடித்து தள்ளினார்.

* விஜயகுமாரை தடுத்த என் கணவரை, அருண் விஜய் அடித்து உதைத்தார்.

* என் வீட்டிற்கே சம்பந்தம் இல்லாத அருண் விஜய்க்கும் என்னை தொடுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?

* என் மகன் மீது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அக்கறை இப்போது வந்தது ஏன்?

* தன் மகன் அருண் விஜய்யை காப்பாற்றுவதற்காகத்தான் விஜயகுமார் என் கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

*  விஜயகுமாரின் இந்த செயலுக்கு அவரது மருமகன் டைரக்டர் ஹரியும் உடந்தையாக இருக்கிறார்.

* என் அப்பாவிற்கு, என் மகன்தான் முதல் பேரன். அவன் மூலம் நான் சொத்து ‌கேட்டு விடுவேனோ என்ற பயத்தில்தான் இப்படியெல்லாம் பொய் புகார் செய்திருக்கிறார்கள்.

*  நான் புதியதாக தொடங்கியிருக்கும் நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், அவர்கள் இப்படி செய்கின்றனர் என்றும் நினைக்கிறேன்.

* என் தங்கை ஸ்ரீதேவியின் திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்காமல் திண்டாடினர். வெளியில் சொன்னால் கேவலம்... என் கணவர் ஆனந்தராஜனின் நண்பர் மூலம் தான் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்தோம். நடந்த விஷயங்களை வெளியில் சொன்னால் எல்லாம் நாறிடும்.

* என் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள்; இதனால், குடும்பத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* விஜயகுமார் பற்றியும், அவரது குடும்பம் பற்றியும் நிறைய ரகசியங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் விரைவில் வெளியிடுவேன். கேட்டால், தினம் ஒரு கதையாகச் சொல்வேன். அந்த அளவுக்கு ரகசியங்கள் உள்ளன.

*  அப்பாவின் கையை என் கணவர் உடைக்கவில்லை. சமீபத்தில் திண்டுக்கல் பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கினார். அதில், அவரது கையில், "மல்டிபிள் பிராக்சர் ஏற்பட்டது. சம்பவத்தன்று, தந்தை என்னை அடிக்க வந்தபோது, தடுக்க மட்டும் தான் செய்தார். இதில் அவர் கை முறிந்தது என்று கூறியுள்ளது பொய்.

* இந்த புகாரின் பின்னணியில் ஏதோ பெரிய, "பிரஷர் உள்ளது.

*  எனது அப்பா, அதிகாரத்தை பயன்படுத்தி எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார்.

* மகனை காப்பாற்றுவதற்காக மகளின் கணவரை ஜெயிலில் தள்ளியுள்ளார்.

* என்னை வயிற்றில் உதைத்த அருண் விஜய் மீது பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஜாமீனில் செல்லும்படியான சாதாரண வழக்காகத்தான் போடப்பட்டுள்ளது.

* அருண்விஜய்யும், டைரக்டர் ஹரியும் நேற்று இரவுகூட ரவுடிகளை அனுப்பி என்னை தாக்க முயன்றனர். எனது ஒன்றரை வயது குழந்தை ஜெய்னிதாவின் கழுத்தை நெரித்து கொன்று விடுவோம் என்றும், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்றும் மிரட்டினர்.

* எனது கணவர் கைது தொடர்பாக துணை போலீஸ் கமிஷனரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன். மேலிடத்து உத்தரவு என்று சொல்லிவிட்டார்.

* நான் நன்றாக இருப்பது அருண் விஜய்க்கு பிடிக்கவில்லை. அதனால்தான் எனது பெற்றோரை அவர் தூண்டிவிட்டுள்ளார்.

* விஜயகுமாரின் அவரது சொத்துகள் எதுவும் எனக்கு தேவையில்லை. எனக்கு என் பிள்ளைதான் முக்கியம்.

* எனது தந்தை இவ்வாறு நடந்துகொள்வார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

* அருண் விஜய் வெளிநாடுகளுக்கு சென்று சினிமா ஸ்டண்ட் கலையை கற்று வந்தார். ஆனால் அதை சினிமாவில் காட்டி அவரால் வெற்றி பெற முடியவில்லை. என்னை காலால் எட்டி உதைக்கிறார். அவருக்கு சினிமாவில் வெற்றி கிடைக்காததால் என்னுடைய வளர்ச்சியை கண்டு பொறாமைப்பட்டு இவ்வாறு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார்.

இவ்வாறு வனிதா விஜயகுமார் தனது பேட்டியில் கூறியுள்ளார். 

வனிதா முன்ஜாமீன்: விஜயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, வனிதா மீது புகார் கூறப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரனை நாளை கோர்ட்டுக்கு வருகிறது. இந்நிலையில் வனிதா முன்ஜாமீன் கேட்டு ‌கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

Tags »
Share  
Bookmark and Share

மேலும் தொடர்புடைய செய்திகள்வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in