தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோபிசுந்தர்.. மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்.. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான '1983' படத்திற்கு இப்போது சிறந்த பின்னணி இசைக்கான விருது வாங்கியதில் எல்லோரின் கவனமும் இவர் மீது திரும்பியிருக்கிறது. கடந்தவருடம் மட்டும் இவர் 22 படங்களுக்கு பாடல்களுக்கு இசையமைத்தும், பின்னணி இசையமைத்தும் உள்ளார் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். இதில் அனைத்து முன்னணி ஸ்டார்களின் படங்களும் அடக்கம்.
'1983' படம் அந்த வருடத்திய காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் மீது இளைஞர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை காட்டியது. குறிப்பாக எந்நேரமும் உற்சாகம் தொனிக்கும் பின்னணி இசை படம் முழுவதும் இழையோடி படத்தின் சுவராஸ்யத்திற்கு சுதி கூட்டியது. படம் வெளியான சமயத்திலேயே அனைவராலும் பாராட்டப்பட்ட, ரசிகர்களால் கொண்டாடப்பட்டது கோபிசுந்தரின் இசை..