ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள 'ரஜினி முருகன்' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு கொடைக்கானலில் ஆரம்பமானது. இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகும் முன்னாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷுக்கு உடல் நிலை சரியில்லாமல் சில வாரங்கள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்கள். அவர் முழுவதுமாக குணமடைந்துவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்கள்.
ஜுலை 17ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதால் இப்போது ஆரம்பமாகியுள்ள கடைசிக் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாக உள்ளன. அதன் பின் முதல் பார்வை, டீசர் என ஒவ்வொன்றாக வெளியிட உள்ளார்கள். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் வசூல் சாதனை புரிந்த பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் 'ரஜினி முருகன்' படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறையில்தான் படத்தை முதலில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் படத்தின் நாயகியின் தவிர்க்க முடியாத உடல்நிலை காரணத்தால்தான் படப்பிடிப்பு தள்ளிப் போனது. எனவேதான், வெளியீடும் தள்ளிப் போய்விட்டது. இல்லையென்றால் கோடை விடுமுறையிலேயே ரஜினி முருகனை பார்த்து ரசித்திருக்கலாம். கீர்த்தி சுரேஷ் இந்தப் படம் தவிர 'இது என்ன மாயம், பாம்புச் சட்டை' ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே மூன்று படங்களில் நடிக்கும் நாயகி என்ற பெருமையைப் பெற்றுவிட்டார்.