இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திரைப்படங்களில் பாடல்களைப் பாடுவதுதான் தற்போது நடிகைகளுக்குள் இருக்கும் ஃபேஷனாகப் போய்விட்டது. முறையான இசைப் பயிற்சி இல்லாமல் கூட கேள்வி ஞானத்தால் பாட வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் வேளையில் இப்படி நடிகைகளும் பாட வந்து ஆச்சரியத்தைக் கொடுத்து வருகிறார்கள்.
'பாண்டிய நாடு' படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் 'ஃபை ஃபை..கலாச்சி ஃபை...' பாடலைப் பாடினார். அந்தப் பாடல் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்தது. அடுத்து 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் நடிகை லட்சுமி மேனன் 'குக்குறு குக்குறு...' பாடலைப் பாடினார். அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகவில்லையென்றாலும் கவனிக்கப்பட்டது.
இப்போது 'சுப்பிரமணியபுரம்' படத்தில் நாயகியாக அறிமுகமான சுவாதி ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிக்கும் 'அப்பா டக்கர்' படத்தில் தமன் இசையில் சிம்புவுடன் இணைந்து ஒரு டூயட் பாடலைப் பாட இருக்கிறாராம்.
சுவாதி இதற்கு முன் தெலுங்கில் '100% லவ்' என்ற படத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் 'ஏ ஸ்கொயர் பி ஸ்கொயர்' என்ற பாடலைப் பாடியிருக்கிறார். தமிழில் இப்போதுதான் முதல் முறையாகப் பாடப் போகிறார்.