தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினியின் அடுத்த படம் என்ன? அதனை இயக்கப்போவது யார்? தயாரிக்கப்போவது யார்? என்பதுதான் இப்போது சினிமாவின் மில்லியன் டாலர் கேள்விகள். இந்த கேள்விக்கான பதில்கள் இப்போது தெரியத் தொடங்கி இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்ட ரஜினி, ஐ படம் பற்றி நிறைய விசாரித்திருக்கிறார். அப்படியே அடுத்த படம் பற்றி பேசலாம் என்று ரஜினி கூறியிருக்கிறார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்திருக்கிறார் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன். ஐ யின் தயாரிப்பு செலவு, வந்த லாபம். எல்லா கடன்களையும் அடைத்து விட்ட விபரம் ஆகியவை குறித்து ரஜினியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதில் திருப்தி அடைந்த ரஜினி சேர்ந்து படம் பண்ணலாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. கோச்சடையான், லிங்கா படத்துக்கு வந்த பிரச்னைகளில் ஒரு துளிகூட அடுத்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பது ரஜினியின் எண்ணம்.
அதோடு தனது அடுத்த படத்தை இயக்குவது ஏ.ஆர்.முருகதாஸ்தான் என்பதை ரஜினி எப்போதோ முடிவு செய்துவிட்டார். முருகதாசும் ரஜினிக்கான கதையின் ஒண்லைனை கூறி ஓகே வாங்கிருக்கிறார். "நான் தயாரிப்பாரை ரெடி பண்ணுகிறேன். நீங்க ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க. இந்திப் படத்தையும் முடிச்சிட்டு வாங்க ஐ எம் வெயிட்டிங்" என்று கூறியிருக்கிறார் ரஜினி. தற்போது தயாரிப்பாளரை முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. ஜூன் மாதம் முறையான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.