Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மே மாதத்துக்கு சென்ற இடம் பொருள் ஏவல், இந்தியா பாகிஸ்தான்!

24 மார், 2015 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Idam-porul-yeval-and-India-Pakistan-movie-release-postponed

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை படங்களை இயக்கிய சீனுராமசாமி, அதையடுத்து இயக்கியுள்ள படம் இடம் பொருள் ஏவல். இந்த படத்தில் அவரது முதல் படநாயகனான விஜயசேதுபதியும், இரண்டாவது பட நாயகனான விஷ்ணுவும் இணைந்து நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக கமிட்டான மனீஷாயாதவ் சில பிரச்சினைகள் செய்ததால் சர்ச்சைகள் ஏற்பட்டது.


ஆனபோதும், அதையடுத்து நடந்த சில பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு அவரை படத்தில் இருந்தே நீக்கிய சீனுராமசாமி, அவருக்கு பதிலாக அட்டகத்தி நந்திதாவை புக் பண்ணி வேகமாக படப்பிடிப்பை நடத்தினார். ஆனால் சில மாதங்களில் அவர் படப்பிடிப்பை முடித்து விட்டார் என்றபோதும், அந்த சமயத்தில் விஜயசேதுபதி நடிப்பில் வெளியான வன்மம் படம் தோல்வியடைந்ததால் இடம்பொருள் ஏவல் படத்தை சரியான நேரம் பார்த்துதான் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.


ஆனால் மார்ச் கடைசியில் வெளியிட திட்டமிட்டனர், ஆனால் கமலின் உத்தமவில்லன், கொம்பன் போன்ற படங்கள் வெளிவரயிருப்பதால் இப்போது மே 1-ந்தேதியில் இடம்பொருள் ஏவல் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.


அதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ்துக்கே தனது இந்தியா பாகிஸ்தான் படததை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. ஆனால், அப்போது ஏற்பட்ட தியேட்டர் பிரச்சினையால் ஜனவரியில் வெளியிடயிருந்தார். அந்த படத்தின் பாடல்களைகூட சேனல்களில் வெளியிட்டு பப்ளிசிட்டி செய்தார்.


ஆனால், அப்போது சரியான தியேட்டர்கள் கிடைக்காததால், பிப்ரவரி, மார்ச் என்று இழுத்தடித்துக்கொண்டே வந்த விஜய் ஆண்டனி, இப்போது மே மாதம் எப்படியும் இந்தியா பாகிஸ்தானை வெளியிட்டாக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். அதனால், மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களாக கைப்பற்றும் முயற்சியில் தற்போது அவர் இறங்கியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in