ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேசிங்கு ராஜா படத்துக்கு பிறகு ஜன்னல் ஓரம், புலிவால் படங்கள் தோல்வியடைந்ததால் விமலின் மார்க்கெட்டில் தொய்வு நிலை ஏற்பட்டது. அதன்பிறகு மஞ்சப்பை அவரை காப்பாற்றியபோதும், அதையடுத்து வெளியான நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்கள் அவரை ஏமாற்றின. அதோடு, ரெண்டாவது படமும் ரிலீசாகாமல் கிடக்கிறது.
இதுபோன்ற விசயங்களால் விமலின் மார்க்கெட் தள்ளாட்டத்திலேயே இருக்கிறது. அதனால் அவரால் மற்ற ஹீரோக்களை மாதிரி படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்த முடியவில்லை. இருப்பினும், தற்போது தான் நடித்துள்ள அஞ்சல, மாப்ள சிங்கம் படங்களை ரொம்பவே எதிர்பார்க்கிறார் விமல்.