ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிம்பு நடித்த படங்கள் வெளியாகிறதோ இல்லையோ... அவருக்கு புதிய படங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சிம்பு நடித்த வேட்டை மன்னன் ட்ராப்பாக.... வாலு படம் வெளியாக முடியாதபடி சிக்கலில் கிடக்க.... இது நம்ம ஆளு படம் இன்னும் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருக்க.... அச்சம் என்பது மடமையடா படம் ஒரு பக்கம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளநிலையில்... செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.
செல்வராகவனும், சிம்புவும் முதன் முதலாக இணையும் இப்படம் பக்கா ஆக்ஷன் படமாம். செல்வராகவன் இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவகையில் இப்படம் தயாராக இருக்கிறதாம். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் என்பது ஏற்கெனவே அடிபட்ட விஷயம்! அது தற்போது உறுதியாகிவிட்டது. செல்வராகவன் உருவாக்கியுள்ள இப்பட கதையில் இரண்டு கதாநாயகிகள் கேரக்டர்கள் உள்ளனவாம். இரண்டு கேரக்டருக்கும் சம அளவில் முக்கியத்துவம் இருப்பதுபோல் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். அதனால் இன்னொரு கதாநாயகி கேரக்டரில் டாப்ஸியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார் செல்வராகவன். டாப்ஸி பெரிய சம்பளம் கேட்க, அதற்கு ஓகே சொல்லப்பட்டதை அடுத்து இப்படத்தில் நடிக்க டாப்சி ஒப்புக்கொண்டுள்ளார்.
இப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைப்பாளர்!