ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பத்தலைவியான ஜோதிகா இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அரிதாரம் பூசியுள்ள படம் என்ற பெருமை '36 வயதினிலே' படத்துக்கு கிடைத்திருக்கிறது.
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தின் ரீ-மேக்கான இப்படத்தை சூர்யாவே தன்னுடைய சொந்த பட நிறுவனமான '2டி என்டர்டெயின்மென்ட்'சார்பில் தயாரித்துள்ளார்.
'ஹவ் ஓல்ட் ஆர் யூ' மலையாள ப்படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே '36 வயதினிலே' படத்தையும் இயக்கியிருக்கிறார்.
ஜோதிகாவுடன் ரகுமான், அபிராமி முதலானோர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் நடித்துள்ள படம் இது என்ற ஒரு விஷயமே 36 வயதினிலே படத்துக்கு கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
36 வயதினிலே படத்தின் பாடல்கள் வருகிற 29- ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு தன் சகாக்களை முடுக்கிவிட்டிருக்கிறார் சூர்யா.