இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இசையமைப்பாளராக அறிமுகமான குறுகிய காலத்திலேயே உலகப் புகழ் பெற்றவர் அனிருத். அவர் இசையமைத்த முதல் படமான '3' தோல்வியடைந்தாலும் அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களும், தொடர்ந்து அவரது இசையில் வெளிவந்த படங்களின் பாடல்களும் இளம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களை அதிகம் கவர்ந்து. ஏ.ஆர்.ரகுமானே, அனிருத்தை அழைத்து 'ஐ' படத்தில் பாட வைக்கும் அளவிற்கு சிறந்த பாடகராகவும் அனிருத் மாறிவிட்டார். அதோடு கடந்த சில வருடங்களாக இருந்த இமான், யுவன் அலையையும் அப்படியே தள்ளி விட்டு விட்டார்.
தமிழில் அஜித் படத்திற்கு இசையமைப்பதற்காக தெலுங்கில் முதன் முதலாக இசையமைக்க கிடைத்த வாய்ப்பையும் அனிருத் உதறிய தகவல் இப்போது கிடைத்துள்ளது. சீனு வைட்லா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கத் தயாராக போகும் படத்திற்கு அனிருத்தைத்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அந்தப் படத்திற்கான வேலைகள் ஆரம்பமாவதற்கு முன்பே அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்கு கிடைத்துவிட்டது. ஒரே சமயத்தில் இரண்டு பெரிய படங்களில் இசையமைப்பது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் தெலுங்கில் ராம்சரண் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அனிருத்தே வேண்டாமென்று சொல்லிவிட்டாராம்.