வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து வெளியான ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக்கான 36 வயதினிலே படத்தில் நடித்து முடித்து விட்டார் ஜோதிகா. 2006ல் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, அந்த வருடத்தில் மட்டும் சரவணா, ஷாக், வேட்டையாடு விளையாடு, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்தவர், அதற்கடுத்தும் சில படங்களை முடித்துக்கொடுத்து விட்டு, சீதா கல்யாணம் என்ற மலையாள படத்தோடு நடிப்பை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், 6 ஆண்டுகள் கழித்து தற்போது 36 வயதினிலே படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்த படம் மலையாள படத்தின் ரீமேக் என்றபோதும், கதையில் சில திருத்தம் செய்துள்ளனர். அதாவது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்க, சொந்த ஊரில் உள்ள ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை செய்யும் வசந்தி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் ஜோதிகா.