Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிஜ ஹீரோவை சினிமாவில் வில்லனாக்கி விட்டேன்: இயக்குனர் வருத்தம்

21 மார், 2015 - 11:05 IST
எழுத்தின் அளவு:
Director-feels-that-he-shows-real-hero-Dr.Saravanan-as-villain

மதுரையை சேர்ந்தவர் டாக்டர் சரவணன். பல மருத்துவமனைகளை கட்டி இலவச மருத்து சேவைகளை செய்து வருகிறவர். மக்கள் நல பணிகளையும் செய்து அந்த பகுதியில் ஹீரோவாக வலம் வருகிறவர். தானே தயாரித்த ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது சரித்திரம்பேசு என்ற படத்தில் கொடூரவில்லனாக நடிக்கிறார். கிருபா, கன்னிகா என்ற இளம் ஜோடிகளுடன் பசங்க படத்தில் நடித்த சிறுமி தாரணியும் நடிக்கிறார். சரத்குமார் நடித்த சத்ரபதி படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ் இயக்குகிறார். நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் டாக்டர் சரவணனை கொடூர வில்லனாக நடிக்க வைத்து விட்டேனே என்று வருத்தத்துடன் கூறினார் ஸ்ரீமகேஷ்.


மேலும் அவர் கூறியதாவது: இந்த படத்தில் கவுரவத்திற்காக கொலை செய்கிற கொடூரமான வில்லன் வேடத்தில் டாக்டர் சரவணனை நடிக்க வைத்தது எனக்குள் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் டாக்டர் சரவணனை நிழலில் வில்லனாக காட்டுகிறோம் என்று.


இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்டது அப்போது, சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் என்னை அழைத்து சென்று உயிர் பிழைக்க வைத்தார். அந்த ஆஸ்பத்திரியில் நான் இருந்த போதுதான் என்னை போன்று நிறைய பேருக்கு இலவசமாக ஆபரேசன் செய்து உயிர் பிழைக்க வைக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. அத்துடன் சிகிச்சைக்கு உள்ள நோயாளிகளின் குடும்பத்தினர் யார் எத்தனை பேர் வந்தாலும் அங்கேயே தங்கிக்கொள்ளலாம். தடுப்பதில்லை... நிறைய பேரின் உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் அவரை கொடூர வில்லனாக காட்டி இருக்கிறேன். ஒரு புறம் இது வருத்தமாக இருந்தாலும் டாக்டர் சரவணனிடம் இருக்கும் நடிப்பை வெளிக் கொண்டு வந்ததில் சந்தோஷமாகவும் இருக்கிறது. என்கிறார் ஸ்ரீமகேஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in