Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டைரக்சன் செய்கிறார் தனுஷ்.?!

21 மார், 2015 - 09:43 IST
எழுத்தின் அளவு:
Dhanush-to-direct.?

வேலையில்லா பட்டதாரி, அனேகன் படங்களின் வெற்றிக்குப்பிறகு உற்சாகமாக பயணித்துக்கொண்டிருக்கும் தனுஷ், தற்போது மாரி படத்தில் நடித்து முடித்து விட்டார். அனேகனில் வட சென்னைவாசியாக நடித்தவர், இந்த மாரி படத்திலும் வட சென்னைக்காரராகத் தான் நடித்திருக்கிறார். அதோடு, தாடி, மீசையெல்லாம் வைத்து கெட்டப்பை மாற்றி நடித்திருக்கிறார்.


ஆனால் கடந்த சில மாதங்களில் மாரி வேலைகளை முடித்துக்கொடுத்து விட்ட தனுஷ், நேற்று முதல் வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.


மேலும், வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தபோதே சில காட்சிகளை தானே இயக்கிய தனுஷ், வேல்ராஜ் இயக்கும் புதிய படத்திலும் இயக்கப்போகிறாராம். அதாவது தான் நடிக்கும் காட்சிகளை வேல்ராஜ் இயக்க, மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை அவ்வப்போது தனுஷ் இயக்கப்போவதாக சொல்கிறார்கள். ஆக, தற்போது டைரக்சனில் டிரையல் பார்த்து வரும் தனுஷ், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என 4 அவதாரங்களை எடுத்திருப்பவர், ஐந்தாவதாக டைரக்டர் அவதாரத்தையும் விரைவில் எடுப்பார் என்று தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in