தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினி போலீசாக நடித்த மூன்று முகம் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது போன்று காக்கி சட்டை படம் கமலுக்கு அமைந்தது. அதேபோல் விக்ரமுக்கு சாமியும், சூர்யாவுக்கு காக்க காக்க படமும் திருப்புமுனை படங்களாக அமைந்தன. அந்தவகையில், சிவகார்த்திகேயனும் காக்கி சட்டை என்ற படத்தில் சமீபத்தில் நடித்தார். அந்த படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும்கூட சிவகார்த்திகேயனின் ஆக்சன் ரூட்டுக்கு அடித்தளம் போட்டு விட்ட படம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரைத் தொடர்ந்து இப்போது விஜயசேதுபதியும், பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார் அடுத்து இயக்கும் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இது அவர் காக்கி சட்டை அணிந்து நடிக்கும் முதல் படமாகும்.
மேலும், அருண்குமார் இயக்கிய பண்ணையாரும் பத்மினியும் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை. என்றபோதும், இந்த முறை வெற்றியை எட்டிப்பிடித்து விட வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் அவர், விஜயசேதபதியை இந்த படத்தில் வழக்கமான போலீசாக இல்லாமல் ஒரு வித்தியாசமான கேரக்டரில் வெளிப்படுத்துகிறாராம். ஆக, தமிழ் சினிமாவில் ட்ரன்ட் சென்டர் நடிகரான விஜயசேதுபதி, இந்த படததில் காக்கி சட்டைக்கும் புதிய ட்ரண்டை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.