பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம் 'ருத்ரமாதேவி'. தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் குணசேகர் இயக்கத்தில், அனுஷ்கா 'ருத்ரமாதேவி'யாக நடிக்கும் இந்தப் படம் கோடை விடுமுறையில் வெியாக உள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
'ருத்ரமாதேவி'படத்தில் அனுஷ்கா மகாராணியாக நடித்திருந்தாலும் நித்யா மேனனுக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறாராம். இந்த ஆச்சரியத் தகவல் நேற்று டோலிவுட்டில் பரவியுள்ளது. அந்தக் காலத்தில் எல்லாம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்வதால் நித்யா மேனன் போன்ற இளம் நடிகைக்கு அனுஷ்கா அம்மாவாக நடிப்பதும் பொருத்தமாகவே இருக்கும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக அந்தப்புரத்தில் இருக்கும் அனுஷ்கா, நித்யா மேனன், கேத்தரின் தெரேசா ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன. போகப் போக இந்தப் படம் பற்றிய பல ஆச்சரியத் தகவல்கள் வெளியாகும் என்கிறார்கள்.