தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு படத்தில் நடிகருக்கு வாய்ப்புக்கு கொடுத்து பிறகு ஃபுட்டேஜ் என்கிற பெயரில் வெட்டி தள்ளும் போக்கு சினிமாவில் உண்டு. அந்த வகையில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் நடிகர் சம்பத்ராம். இவரின் நடிப்பு திறமையை கண்ட இயக்குனர் கௌதம வாசுதேவ் மேனன். சமீபத்தில் திரைக்கு வந்த என்னை அறிந்தால் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். பெரிய இயக்குனர் தல நடிக்கும் படமாச்சே என்று சம்பத்ராம் ஃபுல் எப்பர்ட் போட்டு நடித்திருக்கிறார். இவரின் நடிப்பை பார்த்த தல நடிகர் தட்டிக் கொடுத்து பாராட்டியதோடு, தன்னுடைய அடுத்த படத்தில் பயணிக்கலாம் என்றும் உத்தரவாதம் கொடுத்தாராம். இந்த படத்தின் ட்ரைலரில் சம்பத்ராம் காட்சியும் வெளியானதாம். ஆனால், படம் திரைக்கு வந்தபோது சம்பத்ராம் தனது சகாக்களுடன் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். க்ளைமாக்ஸ் வரை கண்ணில் வெளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பார்த்திருக்கிறார். படத்தில் சம்பராம் காட்சி மிஸ்சிங். மனவேதனையோடு தியேட்டரை விட்டு வெளியே வந்துள்ளார். இதே போல 12 வளரும் நடிகர்கள் நடித்திருந்த காட்சிகளும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.