டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பரபரப்பான இசை வேலைகளின் இடையே தனது நண்பன் ரத்திந்திரன் R பிரசாத் குறும்படத்தை படத்தை நிர்வாக தயாரிப்பு செய்துள்ளார் .. 'ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' (Swayer Corporations) என்ற இக்குறும்படம், பிரான்ஸ் நாட்டில் நடக்கும் 2015ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது. முழுக்க முழுக்க சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப்பட்டுள்ள 'ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' குறும்படத்தை துருக்கி நாட்டை சேர்ந்த தயாரிப்பாளர்கள் பசாக் கேசிலர் பிரசாத் மற்றும் ஹக்கன் கண்டார்லி சார்பாக இசையமைப்பாளர் ஜிப்ரான் பொறுப்பேற்று தயாரித்துள்ளார்.
“ ரத்திந்திரன் எனது சிறு வயது நண்பர். நல்ல சினிமா பற்றிய விஷயங்களை ஆராய்வதுண்டு. பல சர்வதேச திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் ..
இவர் ஜெர்மனியில் இயக்கிய Frullings Erwachen என்ற படத்தொகுப்பு விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
சினிமாவில் சாதிக்கவேண்டும் என்று துடிப்புடன் இருப்பவர். இருவரும் பல வருடங்களுக்கு முன் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளோம், அதுவும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. நீண்ட நாள் பிறகு தயாரிப்பு வேலைகளில் இறங்கியது நல்ல அனுபவமாய் இருந்தது. இக்குறும்படம் 'ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் மற்று எனது நண்பன் ரத்திந்திரனுக்கு வாழ்த்துக்கள்” எனக் கூறினார் இசையமைப்பாளர்.
“ ஒரு ரசாயன நிறுவன அதிகாரியை கொல்வதற்கு செல்லும் சுற்றுச்சூழல் ஆர்வலரின் பயணம் தான் கதை. 30நிமிடம் ஓடக்கூடிய இந்த த்ரில்லர் கதையில் பாடலோ பின்னணி இசையோ கிடையாது. ஆனாலும் ஜிப்ரான் இப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக எனக்கு பக்க பலமாய் இருந்தார். எனது ஒளிப்பதிவாளர் ஃபரூக் K பாஷா மற்றும் ஜிப்ரான் ஆகியோருடன் பணிப்புரிந்தது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. “ எனக் கூறினார் ரத்திந்திரன் R பிரசாத்