‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் நடிகைகள் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கும் வரைக்குத்தான் ரொம்ப கஷ்டப்படுவார்கள். ஆனால் மார்க்கெட்டை பிடித்த பிறகு அவர்கள் எங்கு சென்றாலும் வரவேற்புதான். முக்கியமாக கடை திறப்பு விழா, பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளுக்குகூட அவர்களைத்தான் அழைக்கிறார்கள். ஆனால் அப்படி செல்லும் நடிகர்- நடிகைகள், அங்கு சென்று ரிப்பன் கட் பண்ணுவதாக இருந்தாலோ அல்லது நிகழ்ச்சிகளில் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்து விட்டு வருவதற்கோகூட ஒரு தொகையை வாங்கி விட்டுத்தான் செல்வார்கள்.
அந்த வகையில், அட்டகத்தி நந்திதா சென்னை மட்டுமின்றி, பெங்களூரில்கூட கடை திறப்பு விழா மட்டுமல்லாது ஏதாவது பள்ளி மற்றும் கோயில் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் சென்று வருகிறார். அப்படி செல்வதற்கு சில லட்சங்களை சன்மானமாக வாங்கும் நந்திதா, சென்னை வண்டலூரில் உள்ள தனியார் இஞ்சினியரிங் காலேஜில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், அந்த நிகழ்ச்சியில் தான் படித்த காலத்தில் நடந்த சில சுவையான விசயங்களையும் மாணவ மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டாராம் நந்திதா, அதே சமயம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு 2 லட்சம் வாங்கினாராம். சாதாரணமாக கடை திறப்பு விழாக்களுக்கு 5 லட்சம் வாங்கும் நந்திதா, இது கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் 3 லட்சத்தை தியாகம் செய்து விட்டாராம்.