ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வயது 60 தாண்டினாலும், மகன் போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜெயிலுக்குப் போனாலும் ஜாக்கிசான் நடிப்பதை விடுவதாக இல்லை. தற்போது அவர் நடித்து வெளிவந்துள்ள படம் டிராகன் பிலேட். டேனியல் லீ இயக்கி உள்ள இந்தப் படத்தை 9 நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜாக்கி சானுடன், ஜான் கவுசக், ஆன்ட்ரியன் ப்ரவ்டி, லின் பெங் உள்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
ஹிஸ்டாரிக்கல், அமானுஷ்யம், பேண்டசி, கலந்த படம். ஜாக்கியின் பேவரைட் சண்டைக் காட்சிகளும், கமெடி காட்சிகளும் நிறைந்தது. சீன மற்றும் ஆங்கில மொழியில் 65 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தைவான், சீனா, ஹாங்கில் கடந்த மாதமே வெளியாகிவிட்டது. உலகின் மற்ற நாடுகளில் வருகிற 27ந் தேதி வெளிவருகிறது. தமிழில் பெயரை மாற்றாமல் டிராகன் பிலேட் என்ற பெயரிலேயே டப் செய்து வெளியிடுகிறார்கள். 2டி, 3டி, ஐமேக்ஸ் 3டி ஆகிய தொழில்நுட்பங்களில் வெளிவருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அஸ்வினி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஜாக்கிசான் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.