தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நகுலுக்கு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் சின்ன ஆறுதலை கொடுத்தது. தற்போது அவர் நடித்துள்ள நாரதன் படம் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. நாகா வெங்கடேஷ் இயக்கி உள்ள இந்தப் படத்தை வெற்றிவேல் பிலிம்ஸ் சார்பிலும், தி பிரின்ஸ்பல் இந்தியா நிறுவனம் சார்பிலும் எம்.செல்வகுமார், சஜித் நம்பியார் தயாரித்திருக்கிறார்கள். நகுலுக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் நடித்துள்ளார். பிரேம்ஜி அமரன் காமெடியனாக நடித்துள்ளார். சஞ்சய் லோக்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிசர்மா இசை அமைத்துள்ளார்.
நிகிஷாவும், நகுலும் சண்டைக்கோழி காதலர்கள், இருவரையும் பிரிக்க சதி திட்டம் போடுகிறவர் பிரேம்ஜி அமரன். அதற்காக இருவருக்கும் இடையே தவறான தகவல்களை சொல்லி நாரதர் வேலை பார்க்கிறார் பிரேம்ஜி. எப்போதுமே நாரதரின் கலகம் நன்மையில்தானே முடியும். அதுபோல நகுலையும், நிகிஷாவையும் பிரிக்க பிரேம்ஜி செய்யும் எல்லா கலவரமும் அவர்களை இன்னும் நெருக்கமாக்கி விடும். இப்படியான ஒரு காமெடி ரொமாண்டிக் படமாக தயாராகி உள்ளது நாரதன். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.