மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தினந்தோறும் நாகராஜன் கோடம்பாக்கத்திற்கு புதிய இயக்குனர் அல்ல. ஒரே படத்தில் பேசப்பட்டவர். ஒரு இடைவெளிக்கு பிறகு மத்தாப்பூ என்ற படத்தை எடுத்தார். படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை அதற்கான காரணத்தை யோசித்த போது சினிமாவின் முகம் மாறிவிட்டது. இனி நமக்கான ஸ்டைலை தூர வைத்துவிட்டு இப்போதைக்கு இன்டஸ்ட்ரி ஸ்டைல் என்னவோ அந்த ஸ்டைலில் படம் பண்ணவேண்டும் என்று முடிவு எடுத்து களத்தில் இறங்கியுள்ளார். சாலிக்கிராமத்தில் அலுவலகம் அமைத்து தனது அடுத்தப்பட வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார் நாகராஜன். முற்றிலும் புது முகங்கள் நடிக்கிறார்கள். நார்த் மெட்ராஸ் ஸ்டைலில் கதைக்களம் உருவாகி உள்ளது. இசை புதுசு. கானா பாடலில் கருத்துள்ள செய்திகளை தொகுத்து பாடல்கள் கம்போசிங் நடந்து வருகிறது. கபிலன் எழுதியுள்ளார். தலைப்பு மற்ற விபரங்கள் விரைவில் வெளிவர உள்ளன.