நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
இசைஞானி இளையராஜா தான் இசை அமைத்த படங்களைகூட தியேட்டரில் சென்று பார்ப்பதில்லை. அதோடு டிரைலருக்கும் பெரிதாக மெனக்கெடுவதில்லை. ஆனால் தற்போது அவர் இசை அமைத்து வரும் ருத்தரமாதேவி படத்தின் இசையில் அதீத அக்கறை செலுத்தி வருகிறார்.
இந்த படத்தின் முழு பின்னணி இசையையும் லண்டனில் வைத்து செய்ய இருக்கிறார். முன்னதாக இதன் டிரைலரை ரெடி பண்ணி இளையராஜாவிடம் கொடுத்தார் இயக்குனர் குணசேகரன். வழக்கமாக ஒரு மணி நேரத்துக்குள் டிரைலருக்கு இசை அமைக்கும் இளையராஜா. இதற்கு மூன்று நாள் வேண்டும். லைவ் ஆர்க்கெஸ்ட்ரா வைத்துதான் இசை அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டார். அதன் பிறகு லைவ் ஆர்க்கெஸ்ட்ரா வைத்து அதற்கு இசை அமைத்தார்.
இசை அமைத்து முடித்தவுடன் அதை தியேட்டரில் திரையிட்டு எப்படி வந்திருக்கிறது என்பதை பார்க்க முடிவு செய்தார். இதற்காக நேற்று (மார்ச் 17) சத்யம் தியேட்டரில் டிரைலர் திரையிடப்பட்டது. அதனை இளையராஜா, இயக்குனர் குணசேகரன், தமிழ் தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமி ஆகியோர் பார்த்தனர். முழு திருப்தியாக இருப்பதாக சொல்லிவிட்டுச் சென்றார் இளையராஜா.
தெலுங்கு, தமிழ் மொழியில் தயாராகும் ருத்ரமாதேவியில் அனுஷ்கா, ராணா, நித்யாமேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். படத்தின் தமிழ் வசனங்கள் மற்றம் பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார்.