தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் நாயகியாக அறிமுகமான பூர்ணா, அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே விஜய்யால், பார்க்க அசின் போல உள்ளார் என்று பாராட்டப்பட்டார். தொடர்ந்து பூர்ணாவும் தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்தால் ஏதேதோ படங்களில் நடித்து அவரை அவரே பின்னுக்குத் தள்ளிக் கொண்டார். நல்ல அழகும், உடல்வாகும் கொண்ட பூர்ணா சிறப்பாக நடனம் ஆடும் திறமை கொண்டவர். அந்த நடனத் திறமைதான் அவருக்கு தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.
கொரட்டலா சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் 'ஸ்ரீமந்துடு' படத்தில் பூர்ணா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். ஒரு பாடல் என்றதும் ஐட்டம் டான்ஸ் பாடல் என நினைக்க வேண்டாம், அரு ஒரு கிளாசிக்கல் நடனம் இடம் பெறும் பாடல். இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் மகேஷ்பாபுவுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தாராம் பூர்ணா. படப்பிடிப்பில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தினாராம். படப்பிடிப்பு முடிந்து கிளம்பும் போது மட்டும் மகேஷ் பாபுவிடம் வருகிறேன் என்று சொல்லி மட்டும் கிளம்பினாராம். அதைப் பார்த்து யூனிட்டே ஆச்சரியப்பட்டுப் போனதாம்.