வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா |
சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேகன் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கி கடந்த ஆண்டு வெளிவந்த படம் 'ஜிகர்தண்டா'. தமிழில் நல்ல வசூலைக் குவித்த இந்தப் படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ஏப்ரல் மாதம் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறார்கள். சித்தார்த்துக்கு சில வருடங்கள் முன் வரை தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருந்தது. அதன் பின் தமிழ்ப் படங்களிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்தப் பக்கம் வந்தார். ஆனால், கடந்த நான்கைந்து வருடங்களில் தெலுங்கில் அதிகம் நடிக்காத சித்தார்த்துக்கு, தமிழும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. 'தீயா வேலை செய்யணும் குமாரு' படம் மட்டுமே ஓரளவிற்கு வெற்றி பெற்றது.
'ஜிகர்தண்டா' வெற்றிப் படமாக அமைந்தாலும் அந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹாதான் பெரிதாகப் பேசப்பட்டார். தொடர்ந்து வெளிவந்த 'காவியத் தலைவன், எனக்குள் ஒருவன்' ஆகிய படங்கள் சித்தார்த்தை நிறையவே ஏமாற்றிவிட்டது. அதனால் தமிழிலும் நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் 'ஜிகர்தண்டா' படத்தை டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்துள்ளார்கள். தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் செய்யப்படும் சில படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. ஆனால், 'ஜிகர்தண்டா' முற்றிலும் மதுரைப் பின்னணியை மையமாகக் கொண்ட ஒரு படம். அது, தெலுங்கில் எந்த அளவிற்கு எடுபடும் என்பது படம் வெளியானால்தான் தெரியும்.