ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சைனஸ் பிரச்னை காரணமாக நடிகர் அஜீத்திற்கு மூக்கில் இன்று காலை ஆபரேஷன் நடந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜீத் குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வௌிவந்த என்னை அறிந்தால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு இம்மாத துவக்கத்தில், அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த உற்சாகத்தில் இருக்கிறார் அஜீத்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அஜீத்திற்கு சைனஸ் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ''செப்டோபிளாஸ்டி மற்றும் பங்சனல் எண்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி செய்து கொண்டுள்ளார். பிரபல இஎன்டி நிபுணர் டாக்டர்.எம்.கே.ராஜ சேகர், அஜீத்திற்கு இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளார். தற்போது அஜீத் நலமாக இருக்கிறார். உடல் நலம் முழுமையாக தேறிய பின்னர், ஏப்ரல் மாதம் முதல் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
பைக் ரேஸின் போது ஏற்பட்ட விபத்து, ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்து என இதற்கு முன்னரும் சில ஆபரேஷன்களை செய்துள்ளார் அஜீத் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.