‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கனவெல்லாம் பலிக்குதே என்ற தல அஜித்தின் பாடலில் வரும் என்னை விட எந்தன் பிள்ளை ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறக்கிறதே என்ற வரிகள் ஜி வி பிரகாஷ் இசையில் வெளிவந்து ஹிட்டானது . இன்று அதே ஜி .வி .பிரகாஷ் இசை அமைத்து நாயகனாக நடிக்கும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் இயக்குனர் ஆதிக் மற்றும் அப்படத்தில் உதவி இயக்குனராய் பணி புரியும் அவரது தந்தை ரவி கந்தசாமி ஆகியோர் இந்த வரிகளுக்கு உரிமையாளர்கள் ஆகிறார்கள்.
“ அப்பா, எனது வாழ்க்கைல மிக முக்கியமானவர்.பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சினிமா பார்க்க கூடாது என்று அதட்டுவார்கள். எனக்கு சினிமாவை உணர வைத்தவரே அவர்தான். பாரதிராஜா சார், செல்வமணி சார் இப்படி பல பேர்கிட்ட 16 வருடங்களாக உதவி இயக்குனராக பணி புரிந்து வருகிறார். அப்பாவின் போராட்டத்தையோ அவருடைய அங்கீகாரம் தடைபடும் போதும் எனக்குள்ள ஜெயிக்கணும் அப்படிங்கற வெறி வரும். நானே என்னோட பாதையை தேர்ந்தெடுத்து இன்னிக்கு GV பிரகாஷ் குமாரிடம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் கதையைக் கூறி இன்று என் முதல் படத்தை இயக்கி வருகிறேன். இந்தக் காலக் கட்டத்தில் எங்கள் வீட்டில் ஒருவர் தான் இயக்குனராக வேண்டும் என இருக்கிறதோ என்னவோ. ஆனால் ஒன்று என் அப்பாவும் ஒரு படம் இயக்குவார் தேவைப்பட்டால் நான் அவருக்கு உதவவும் செய்வேன்” என்று தன் அப்பா கனவை நினைவேற்றிய சந்தோஷத்துடன் கூறினார் அறிமுக இயக்குனர் ஆதிக்.