டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சுந்தர்.சி. இயக்கிய ஆம்பள படத்தை அடுத்து தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஷால்.
காவல் கோட்டம், வேட்டை மன்னன் என இரண்டு தலைப்புகளில் ஏதாவது ஒரு தலைப்பு சூட்டப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஷாலுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணையும் முதல் படம் இது.
விஷால் காஜல் அகர்வால் தவிர இப்படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று அதிகாரபூர்வ தகவல் இல்லை.
எனினும் சமுத்திரக்கனி நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தது. அதுமட்டுமல்ல, விஷாலுடன் மோதும் அதிரடி வில்லனாக சமுத்திரக்கனி நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், சமுத்திரக்கனி ஏற்றுள்ள வேடம் பற்றி தற்போது புதிய தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடிக்கவில்லையாம்!
விஷாலின் மூத்த சகோதரராக தான் நடிக்கிறாராம் சமுத்திரக்கனி! வில்லனாக பெங்களூரை சேர்ந்த ஒரு புதுமுகம் தான் நடிக்கிறாராம்!
இந்த தகவல்களை நடிகர் விஷாலே தெரிவித்துள்ளார்.
நம்புங்கப்பா.... ஹீரோவே சொல்றாருல்ல...