பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
அமரகாவியம் படத்தில் நடித்தவர் மியா ஜார்ஜ். ஆர்யா தம்பி சத்யாவுடன் அந்த படத்தில் நடித்த அவர், தனது மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனபோதும் படத்தின் தோல்வி காரணமாக அது பேசப்படவில்லை. அதனால் தோல்வி முகத்துடன் கேரளா திரும்பிய மியாவை, சி.வி.குமார் தயாரித்துள்ள நேற்று இன்று நாளை படத்துக்காக மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வந்தனர். இந்த படத்தில் விஷ்ணுவுடன் நடித்துள்ள மியா ஜார்ஜ், மலையாளத்தில் அனார்கலி, மாந்திரீக தூவல் என தற்போது 4 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் நேற்று இன்று நாளை படத்துக்கு மொத்த கால்சீட்டாக கொடுக்காமல் 2 நாள், 3 நாள் என்று சிறது சிறிதாகத்தான் கொடுத்து நடித்தாராம்.