ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லூசியா கன்னட படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு பல நடிகர்கள் போட்டிபோட்ட நிலையில், சித்தார்த் புகுந்து அந்த படத்தில் நான்தான் நடிப்பேன் என்று கேட்டு வாங்கி நடித்தார். அதோடு, அந்த படத்தை முதல்நாள் பார்த்தபோதே, அதை யாராவது தமிழில் ரீமேக் செய்தால் நான்தான் நடிக்க வேண்டும் என்று எப்போதோ முடிவெடுத்து விட்டேன் என்றும் கூறினார். அப்படி அதிக ஆர்வத்துடன் அவர் நடித்த எனக்குள் ஒருவன் படம் தற்போது சித்தார்த் எதிர்பர்த்தபடி ஓடவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்துள்ளார் அவர். விளைவு, இந்த படத்தை முடித்ததும் தெலுங்கு, கன்னடத்தில் வெற்றி பெற்ற சில படங்களின் தமிழ் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்ற சில படங்களை டிக் பண்ணி வைத்திருந்த சித்தார்த், இப்போது அந்த ஆசையை விட்டொழித்து விட்டார்.
அதனால், அந்த படங்களை இயக்கயிருந்த டைரக்டர்கள் அவரை தொடர்பு கொண்டபோது, ஒவ்வொரு மொழி ரசிகர்களின் ரசனையும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. அதனால் மற்ற மொழியில் ஓடிய படத்தை தமிழில் ரீமேக் செய்தால் வெற்றி கிடைப்பது அரிதுதான். அதனால் மீண்டும் மீண்டும் ரீமேக் படங்களில் நடித்து ரிஸ்க் எடுக்க நான் தயாராக இல்லை என்று மறுத்து விட்டாராம் சித்தார்த்.