பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அட்டகத்தி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் விஜயசேதுபதியுடன் நடித்தார். அதோடு அவருடன் கிசுகிசுவிலும் சிக்கினார். அதனால் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் பரபரப்படைந்தது. இந்த நிலையில், தற்போது விஜயசேதுபதி நடித்துள்ள இடம்பொருள் ஏவல் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதோடு, விதார்த், தினேஷ் போன்ற நடிகர்களுடனும் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், முன்பு பரபரப்பாக பேசப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது இருக்கிற இடமே தெரியவில்லை.
அதனால் படத்துக்குப்படம் தனது படக்கூலியை உயர்த்திக்கொண்டே வந்த அவர், தற்போது நடித்து வரும் படங்களில் கணிசமான தொகையை குறைத்துக்கொண்டுள்ளார். அதோடு, இதுவரை கிளாமர் விசயத்தில் அடக்கி வாசித்து வந்த அவர், இனிமேல் அதிரடி கிளாமர் நடிகையாக உருவெடுக்கப்போகிறாராம்.