ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தாரை தப்பட்டை படத்தின் சூட்டிங்கின் போது, நடிகர் சசிக்குமாருக்கு, கை எலும்புமுறிவு ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாலா இயக்கத்தில், சசிக்குமார், வரலட்சுமி நடிப்பில் தாரை தப்பட்டை படம் உருவாகி வருகிறது. இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
சசிக்குமார் வில்லனுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அதிரடியான சண்டைக்காட்சியின் போது சசிகுமார் சற்றும் எதிர்பாராவண்ணம் விபத்துக்குள்ளானார். இதனால் அவரது இடது கை எலும்பு முறிந்தது. உடனடியாக மருத்துவ குழுவினர் உதவியோடு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின் சசிக்குமாரின் இடது கைக்கு மாவுக்கட்டு போடப்பட்டது.