ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்தியத் திரையுலகில் கிளாமராக நடிக்கும் நடிகைகளில் காஜல் அகர்வாலுக்கு முக்கிய இடம் உண்டு. நல்ல உயரமாகவும், அழகான உடலமைப்பிலும் மற்ற ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு இருப்பவர் காஜல். தெலுங்கில் அவருடைய கிளாமரான நடிப்பிற்கு முன்னால் வேறு எந்த ஹீரோயினும் வருவார்களா என்பது சந்தேகம்தான். தமிழில் அந்த அளவிற்கு கிளாமராக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால்தான், இங்கு அதிக கவர்ச்சியாக நடிக்காமல் இருக்கிறார் காஜல்.
அப்படிப்பட்ட காஜலுக்கு ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட வேண்டும் என்று ஆசையாம். அது மட்டுமல்ல வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் போல அல்லாமல் நெகட்டிவ்வான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றும் நினைக்கிறாராம். அதனால் காஜல் அகர்வாலை வில்லத்தனமாக கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கலாம் என்றும் நினைப்பவர்களும், அயிட்டம் சாங்கில் ஆட வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் காஜல் அகர்வாலை தாராளமாக அணுகலாம். கண்டிப்பாக அதற்கு மறுப்பு சொல்ல மாட்டார்.