மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உவாக உள்ள தில்வாலே படத்தில், ஷாரூக் கான் மற்றும் கஜோல் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். பாஜிக்கர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, குச் குச் ஹோத்தா ஹைய், கபி குஷி கபி காம் உள்ளிட்ட படங்களில், ஷாரூக் கானிற்கு ஜோடியாக, கஜோல் நடித்திருந்தார். இந்த படங்களின் வெற்றிக்கு, இந்த ஜோடி தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. இதில் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, படம் மும்பையில் உள்ள தியேட்டரில், 1000 வாரங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்திருந்தது நினைவிருக்கலாம். ஷாரூக் கான், இதற்கு முன், ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.