'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் கங்காரு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் . சாமி இயக்கியுள்ளார். அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க அவரின் தங்கையாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். அர்ஜுனாவின் காதலியாக வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார். தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்குனர் ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக பாடகர் ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு ராஜரத்னம் செய்துள்ளார்.
கங்காரு படத்தில் அஜித் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் மோதவிடும் காட்சி ஒன்றை வைத்துள்ளார் சாமி. படத்தில் பிரியங்கா தல ரசிகையாகவும், வர்ஷா விஜய்யின் ரசிகையாகவும் வருகிறார்கள். இருவரும் ஒரு காட்சியில் தங்கள் நாயகனின் அருமை பெருமைகளை சொல்லி காரசாரமாக மோதிக்கொள்வார்கள். பிரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா அதற்கு காரசாரமாக பதிலடி கொடுப்பதோடு விஜய்யின் புகழ் பாடுவார். இப்படியாக இவர்களின் சண்டை கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு நீளும். படத்தில் தல ரசிகரையே பிரியங்கா மணந்து கொள்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படம் ஏப்ரல் பத்தாம் தேதி 150 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.