Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யுடன் நடிக்கிறார் பாரதிராஜா.?!

14 மார், 2015 - 18:38 IST
எழுத்தின் அளவு:
Bharathiraja-to-act-in-Vijay-film

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு இயக்குநர் பாரதிராஜா. நான்கு சுவற்றுக்குள் செட்டிங் போட்டு நடந்து வந்த சினிமாவை, கிராமத்து மண் கமழும் இடங்களோடு, மக்களோடு மக்களாக இருந்து படம் எடுத்தவர் பாரதிராஜா. இவரது படைப்பில் வௌியான பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. நீண்ட இடைவௌிக்கு பிறகு தற்போது ஒரு படத்தை இயக்கி, அதில் தானே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பாரதிராஜா. இதற்கிடையே அவ்வப்போது வேறு இயக்குநர்களின் படங்களிலும் பாரதிராஜா நடிக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வௌிவந்த பாண்டியநாடு படத்தில், விஷாலின் அப்பாவாக அற்புதமாக நடித்திருந்தார் பாரதிராஜா. இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.


இந்நிலையில் பாரதிராஜா, முதன்முறையாக விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. தற்போது புலி படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்தபடியாக 'ராஜா ராணி' அட்லி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் தான் பாரதிராஜா ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான ஹீரோயின் உள்ளிட்ட நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இப்படம் பற்றிய முழு அறிவிப்புகள் வௌியாகும் என தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in