ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது தான் ஒவ்வொரு நடிகையின் கனவாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தற்போது நடிகை நித்யா மேனனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அவர் தற்போது சன் ஆப் சத்யமூர்த்தி படத்தில், ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு ஜோடி சேருவதை அந்த படத்தின் போஸ்டரை பார்த்தால் தெரிகிறது. சமீபத்தில் வெளியான அந்த போஸ்டரில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த புல் பைட்டர் போல உடை அணிந்து நிற்கும் ஹீரோ அல்லு அர்ஜுன் அருகில் நித்யா மேனன் உள்ளார். முன்னணி கதாநாயகனாகிய அல்லுவுடனும், பிரபல இயக்குனரான திரிவிக்ரமுடனும் அவர் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்று இருப்பதால், நித்யா மேனன் முன்னணி இடத்தை பிடிப்பார் என்று டோலியுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.