தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்தை லக்ஷ்மன் இயக்கி உள்ளார், இமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் டி.ராஜேந்தரை கருவாக கொண்டு டண்டனக்கா என்ற பாடல் வெளியிட்டப்பட்டது. இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து இணையதளவாசிகள் கலாய்த்து வருகிறார்கள். இதனால் பெரிதும் மன வருத்தம் அடைந்திருக்கும் ஜெயம் ரவி இதுபற்றி கூறியதாவது:
ரோமியோ ஜூலியட் படத்தில் நான் டி.ஆரின் ரசிகனாக நடித்திருக்கிறேன். அவரது தன்னபிக்கையும், எதுவும் என்னால் முடியும் முயற்சி செய்து பார்..இதுவும் முடியும் இதுக்கு மேலும் முடியும் என்கிற அவரது தன்னம்பிக்கை தான் என் கதாப்பாத்திரத்தின் இன்ஸ்பிரேசன். அதனால் தான் அவரது எவர்கிரீன் வரிகளான “ டண்டணக்கா” என்கிற வரிகளையும், அவரையும் சேர்த்து இந்த பாடலில் பதிவு செய்து இருக்கிறோம்.
எந்த ஒரு வரிகளிலும், வார்த்தைகளிலுமே அவரை குறைவாகவோ குறிப்பிடவில்லை. அவரை பெருமை படுத்தும் விதமாகவே பாடல் உருவாக்கப் பட்டுள்ளது. நான் எப்போதுமே எந்த விதமான கருத்து மோதல்களிலும் சிக்கியதில்லை. எங்க அப்பா, அம்மாவுக்கு எப்படி செல்லப் பிள்ளையாக இருக்கிறேனோ அதே மாதிரியே எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்க ஆசைப்படுகிறேன்.
அதனால் தயவு செய்து இந்த பாடலை யாரும் ரீமிக்ஸ் செய்து தன்னம்பிக்கை தமிழனான டி.ஆர் அவர்களை புண்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேடடுக்கொள்கிறேன் என்கிறார் ஜெயம் ரவி.