அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஒரு படத்தின் கதையின் தொடர்ச்சியாக அடுத்த பாகத்தை படமாக எடுப்பதை திரையுலகில் சீக்வெல் என்று சொல்வார்கள். இதுபோன்ற எத்தனையோ படங்கள் வெளியாகி இருக்கின்றன. முந்தைய பாகத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அடுத்த பாகத்திலும் இடம்பெறும். ஆனால் ஒரு படத்தில் நடித்த கேரக்டர் சம்மந்தமே இல்லாத இன்னொரு படத்தில் இடம்பெறுவது அபூர்வம். ஜெயம் ரவியும், ஹன்சிகாவும் இணைந்து நடித்திருக்கும் படம் ரோமியோ ஜூலியட் படத்தில் இப்படி ஒரு அபூர்வமான விஷயம் நடந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் விமான பணிப்பெண்ணாக ஹன்சிகா நடித்திருந்தார். அதே கேரக்டரில்.. முக்கியமாக அதே கலர் யூனிபார்ம் அணிந்து அதே கெட்டப்பில் ரோமியோ ஜூலியட் படத்திலும் நடித்திருக்கிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் விமான பணிப்பெண்ணான ஹன்சிகாவை உதயநிதியும், சந்தானமும் சேர்ந்து கலாய்ப்பதாக காட்சிகள் இடம்பெற்றிருந்தது. ரோமியோ ஜூலியட் படத்திலோ ஹன்சிகா பணிப்பெண்ணாக பணியாற்றும் விமானத்தில் பயணம் செய்யும் ஜெயம்ரவி அவரை சந்திப்பதுபோலவும் ஜொள்ளுவிடுவதுபோலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.