Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தமன்னாவும் 10 வருட கிளப்பில்...

13 மார், 2015 - 11:15 IST
எழுத்தின் அளவு:
Tamanna-completes-10-years-in-cine-industry

தமிழில் அதிகம் நடிக்கவில்லை என்றால் தமன்னாவை மறந்து விடுவோமா என்ன...அப்படி ஒரு மில்க் பியூட்டியை மறந்து விட்டால் நமது ரசிகர்கள் சும்மா விடுவார்களா...தற்போது ஆர்யா ஜோடியாக 'வாசுவும் சரணவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் மட்டுமே நடித்து வரும் தமன்னா, 2005ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி வெளிவந்த 'சந்த் சா ரோஷன் சேரா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.


அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் 'ஸ்ரீ' என்ற தெலுங்குப் படத்திலும், 2006ம் ஆண்டு 'கேடி' படத்திலும் நாயகியாக அறிமுகமானார். 'கேடி' படம் பெரிய வெற்றியைப் பெறாமல் போய்விட்டது. அதன் பின் “வியாபாரி, நேற்று இன்று நாளை' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். இருந்தாலும் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதன் பின் 2007ம் ஆண்டு வெளிவந்த 'கல்லூரி' படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. தொடர்ந்து, தனுஷ் ஜோடியாக 'படிக்காதவன்', சூர்யா ஜோடியாக 'அயன்', கார்த்தி ஜோடியாக 'பையா, சிறுத்தை' , பரத் ஜோடியாக 'கண்டேன் காதலை', ஆகிய வெற்றிப் படங்களிலும், 'ஆனந்த தாண்டவம், சுறா, தில்லாலங்கடி, வேங்கை,' ஆகிய தோல்விப் படங்களிலும் நடித்தார்.


இடையில் நடிகர் கார்த்தியை தமன்னா காதலிப்பதாக வந்த வதந்தியை அடுத்து திடீரென தமிழ்ப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கினார். சுமார் 3 வருடங்கள் கழித்துத்தான் 'வீரம்' படத்தின் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் முன்னணி ஹீரோயின்கில் ஒருவராக இன்றும் இருக்கிறார். விரைவில் அவர் தெலுங்கில் நடித்துள்ள 'பாகுபலி, பெங்கால் டைகர்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.


த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோருடன் 10 வருட கிளப்பில் தமன்னாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வயதானாலும் அவர்களின் அழகும், பொலிவும் இன்னும் குறையாமல் இருப்பதே இத்தனை வருடங்களாக அவர்களை முன்னணியில் இருக்க வைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in