ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'சுப்பிரமணியபுரம்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜேம்ஸ் வசந்தன், அதன் பின் சில படங்களுக்கு இசையமைத்தாலும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இடம் பிடிக்காமலே போய்விட்டார். இன்னமும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவே பணியாற்றிக் கொண்டு, திரையுலக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவருக்குள்ளும் இருந்த இயக்குனர் ஆசை 'வானவில் வாழ்க்கை' படத்தின் மூலம் எட்டிப் பார்த்துள்ளது.
முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படம் நாளை வெளியாக உள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ள ஜிதின் பார்ப்பதற்கு நடிகர் சித்தார்த் தோற்றத்திலேயே இருக்கிறார். உடலமைப்பு, முக அமைப்பு முதல் இவருக்கும், சித்தார்த்துக்கும் ஆறு வித்தியாசங்களைக் கூட சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. நடனம், பாட்டு, நடிப்பு என அனைத்திலும் ஜிதின்தான் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். நல்ல படங்களைத் தேர்வு செய்தால் இவரும் முன்னணிக்கு வந்து விடலாம். சித்தார்த் கொஞ்சம் உஷராக இருப்பது நல்லது...