'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஒரு காலத்தில் அஜீத்தின் ஆஸ்தான தயாரிப்பாளராக இருந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சனேயன், ஜி, வரலாறு ஆகிய அஜீத் படங்களை தயாரித்தவர். தற்போது சிம்புவை வைத்து வாலு, வேட்டை மன்னன் படங்களை தயாரித்து வருகிறார். அது கிடப்பில் கிடக்கிறது.
இந்த நிலையில் சக்ரவர்த்தி நடிகர் ஆகிவிட்டார். சமீபத்தில் வெளிவந்த தொப்பி படத்தில் காட்டுக்குள் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை பிடிக்க வரும் அலெக்ஸ் என்ற கியூ பிரான்ஞ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து நல்ல கேரக்டர்களில் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இது தயாரிப்பளார்கள் நடிகர்கள் ஆகும் காலம் போலும். நாளை (மார்ச் 13) வெளிவர உள்ள ராஜதந்திரம் படத்தில் தயாரிப்பாளர் பட்டியல் சேகர் வில்லனாக அறிமுகமாகிறார்.