பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய்யின், 'புலி' படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார், கோலிவுட் பப்ளிமாஸ் ஹன்சிகா. இதுவரை அவர் நடித்த படங்களில், பெரிய அளவில் அவர் வசனம் பேசியது இல்லை. ஹீரோவுடன் டூயட் பாடுவது, ஏதாவது ஒரு சில வார்த்தைகள் பேசுவது என, ஒப்பேற்றி வந்தார். ஆனால், 'புலி' படத்தில், அரைப்பக்க வசனத்தை கொடுத்து, அதை மனப்பாடம் செய்ய சொல்லி விட்டாராம் இயக்குனர். இதனால், செய்வதறியாது திகைத்துப் போன ஹன்சிகாவுக்கு, அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும், சீனியர் நடிகையான ஸ்ரீதேவி தான் தைரியம் கொடுத்தாராம். தமிழ் வசனத்தை எப்படி உச்சரிப்பது, ஏற்ற இறக்கங்களுடன் பேசுவது என, ஹன்சிகாவுக்கு, 'டியூஷன்' எடுத்தாராம் ஸ்ரீதேவி. இதனால், 'என்ன இருந்தாலும் சீனியர், சீனியர் தான்' என, ஸ்ரீதேவி புகழ்பாடுகிறார் ஹன்சிகா.