பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
சுசீந்திரன் இயக்கிய முதல் படமான வெண்ணிலா கபடி குழுவின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இதனை சுசீந்திரன் உதவியாளர் சேகர் இயக்க இருக்கிறார். வெண்ணிலா கபடி குழுவில் பணியாற்றிய அதே தொழில்நுட்ப கலைஞர்கள் இதிலும் பணியாற்ற இருக்கிறார்கள்.
வெண்ணிலா கபடி குழுவில் விஷ்ணு ஹீரோவாக நடித்திருந்தார். முதல்பாக கதைப்படி விஷ்ணு இறந்து விடுவதால், இரண்டாம் பாகத்தில் அவர் இல்லை. விஷ்ணுவின் மரணத்திற்கு பிறகு அவரது இடத்திற்கு வந்து அணிக்கு புதிய கேப்டனாக அன்னக்கொடி படத்தில் ஹீரோவாக அறிமுகமான லக்ஷ்மன் நடிக்கிறார். நாயகியாக நந்திதா நடிக்கலாம் என்று தெரிகிறது. பயிற்சியாளர் கேரக்டரில் கிஷோர் நடிக்கிறார். இதில் லக்ஷ்மணனின் தந்தை கேரக்டர் பவர்புல்லாக அமைக்கப்பட்டுள்ளதாம். அதில் பசுபதி நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஏப்ரல் கடைசி வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.