‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஒரு பிரபலமான நடிகரைப்போன்ற சாயலில் இன்னொருவர் நடிக்க வருவது உண்டு. ரஜினிகாந்த் சாயலில் நளினிகாந்த், விஜயகாந்த் வந்தனர். ஒருவர் தோற்றார், ஒருவர் ஜெயித்தார். கமலின் சாயலில் மோகன் வந்தார் தாக்குபிடித்தார். அந்த வரிசையில் சத்யராஜ் மாடுலேஷன், குரல் ஆகியவற்றோடு அறிமுகமானவர் சத்யன். சத்யராஜின் உறவினரும்கூட.
முதலில் அவரது அப்பா தயாரிப்பில் இளையவன் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் பெரிய தோல்வியை சந்தித்ததும். ஹீரோ ஆசையை கைவிட்டார். அடுத்து கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற படத்தில் நடித்தார். அது வெளிவரவே இல்லை. அடுத்து முத்தம் என்ற படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அதுவும் சரியாக வரவில்லை. கடைசியாக காமெடி டிராக் பிடித்தார்.
பரபரப்பான காமெடி நடிகனாக வலம் வந்தார். ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் விஜய் நண்பனாக நடித்தார். இந்த இரண்டு படத்தின் மூலம் சத்யன் மிக உயரத்திற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் சத்யன் சறுக்கியது ஏன் என்று தெரியவில்லை.
துப்பாக்கி படத்திற்கு பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஒன்பதுல குரு, மூன்று பேர் மூன்று காதல், தில்லு முல்லு, நையாண்டி, நவீன சரஸ்வதி சபதம் படங்களில் நடித்தபோதும் அந்த படங்கள் அவருக்கு உதவில்லை. அதற்குள் கருணாகரன், சதீஷ், செண்ட்ராயன், காளி வெங்கட், மூனீஷ்காந்த் என்ற புது காமெடி டீம் நுழைந்து விட்டது. சத்யன் சக்தி குறைந்து விட்டது.
அவர் நடித்து முடித்துள்ள இருவர் உள்ளம், அகராதி, களவாடிய பொழுதுகள் படங்கள் வெளிவர முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. சத்யன் இப்போது நம்பிக் கொண்டிருப்பது விஜய் நடிக்கும் புலி படத்தைத்தான். சத்யனுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் விஜய், புலி படத்திலும் வாய்ப்பளித்திருக்கிறார். புலியில் சத்யனுக்கு முக்கியமான கேரக்டர் என்கிறார்கள். புலி சத்யனை காப்பாற்றுமா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.