பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
கன்னடத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருக்கும் நடிகை தீபா சன்னதி. சமீபத்தில் சித்தார்த் நடிபபில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தில் இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடிததுள்ள இவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் யட்சன் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த இரண்டு படங்களிலுமே தீபா சன்னதி படப்பிடிப்பு தளத்தில் நடிப்பில் காட்டும் ஆர்வம் குறித்து அப்படக்குழுவினர் ஆச்சர்யமாகவும், அதே சமயம் பெருமையாகவும் பேசுகிறார். அப்படி என்னதான் ஆச்சர்யப்பட வைத்தார் என்று அவர்களிடம் கேட்டால், தான் நடிக்கிற ஒவ்வொரு காட்சியுமே சிறப்பாக வர வேண்டும் என்பதில் ரொம்பவே மெனக்கெடுகிறார் தீபா சன்னதி என்கிறார்கள்.
அதன்காரணமாக, சில காட்சிகளை டைரக்டர்களே ஓகே சொன்னாலும், தனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால், அதை ஒன்மோர் டேக் எடுக்கலாம் சார் என்று மீண்டும் நடித்துக்கொடுக்கிறாராம் தீபா சன்னதி. விட்டால் போதுமென்று ஓரிரு காட்சிகளில் நடித்ததுமே ஸ்பாட்டை விட்டு ஓட்டம் பிடிக்கும் இன்றைய நடிகைகளுக்கு மத்தியில் ஒன்மோர் டேக் கேட்டு வாங்கி நடிக்கும் தீபா சன்னதியைப்பற்றி சித்தார்த், ஆர்யா இருவருமே கோலிவுட்டில் பெருமையாக பேசி வருகிறார்கள்.