டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டிரினிடாட் அண்ட் டொபாக்கோ நாட்டில், பாலிவுட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் பொருட்டு, அந்நாட்டு தொலைதொடர்பு சேவை நிறுவனம், யூப் டிவியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ டெலிகம்யூனிகேசன்ஸ் சர்வீஸ் நிறுவன துணை செய்ற்குழு தலைவர் வினோத்ராட்ஜ் குமார் கூறியதாவது, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தின் மூலம், டிரினிடாட் அண்ட் டொபாக்கோ டெலிகம்யூனிகேசன்ஸ் சர்வீஸ் நிறுவனம், தங்களது இலக்கை எட்டியுள்ளது. தங்கள் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும், பாலிவுட் நிகழ்ச்சிகளை எந்த இடத்திலும், எந்நேரத்திலும் பார்க்க இதன்மூலம் வழிவகை உருவாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை, நாங்கள் கவுரவமாக கருதுகிறோம்.
யூப் டிவி தலைமை நிர்வாக அதிகாரி உதய் ரெட்டி கூறியதாவது, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ நாட்டில், தங்களது யூப் டிவி மூலம், பாலிவுட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக, தாங்கள் அந்த நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் சேவையை, சர்வதேச அளவில் இதன்மூலம், விரிவாக்கம் செய்யும் கனவு நனவாகியுள்ளதாக அவர் கூறினார்.
சர்வதேச அளவில், எல்லோருக்கும்ம், எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும், தகவல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் காணும் வசதி கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கில், கடந்த 2006ம் ஆண்டில், யூப் டிவி துவங்கப்பட்டது. இணையதளவழியிலான தொழில்நுட்பத்தின் அடிப்படையில், லைவ் டிவி மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட் சேவைகளை வழங்கி வருகிறோம்.
டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டில், பாலிவுட் நிகழ்ச்சிகளை, ஒரு சப்ஸ்கிரிப்சன் மூலம் குறைந்தது 7 நாட்கள் முதல் ஆண்டு பேக் வரையிலான சப்ஸ்கிரிப்ஷன்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். என்று உதய் ரெட்டி கூறினார்.