தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொதுவாக சினிமாவுல ஒரு பெரிய ஸ்டார் நடிகர் இருந்தா அவர்களுடையா வாரிசுகளும் சினிமா உலகில் நிலைத்து நிற்க வேண்டுமென்று நினைப்பது வழக்கம்தான், இதற்கு பல நட்சத்திரங்கள் உதாரணமாக சொல்லலாம் டோலிவுட் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் அவரது மகனான அகிலை 3 வயதிலேயே படத்தில் நடிக்க வைத்து அறிமுகம் செய்தார், தற்போது ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒரு படி மேலே போய் அவரது 6 மாத குழந்தையான அல்லு அயனையும் சினிமா திரையில் அறிமுகம் செய்துவைக்கப்போகிறார். த்ரிவிக்ரம் இயக்கத்தில் தற்போது அல்லு அர்ஜுன் நடித்துக் கொண்டிருக்கும் படம் “சன் ஆப் சத்யமூர்த்தி” இந்த படத்தில் தான் க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது குழந்தையை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்போகிறாராம். சமந்தா, நித்யா மேனன் மற்றும் அத்ஹா ஷர்மா நடித்துக் கொண்டிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.