ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
வெங்கட்பிரபு இயக்கும் படங்கள் என்றாலே அதில் மிர்ச்சி சிவா, விஜய் வசந்த், பிரேம்ஜி, வைபவ் என சில நடிகர்கள் கட்டாயம் இருப்பார்கள். ஆனால் அந்த படங்களில் எல்லாம் அவரது தம்பியான பிரேம்ஜி ஹீரோவுக்கு அடுத்தபடியான ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். அதோடு படத்தில் அவரது அலம்பல் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதை அனைவரும் அறிந்ததே. அதேபோல், வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் அவரது பெரியப்பா மகனான யுவன் ஷங்கர் ராஜாவும் கட்டாயம் இருப்பார். அதாவது இதுவரை வெங்கட்பிரபு இயக்கியுள்ள சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி தற்போது இயக்கி வரும மாஸ் ஆகிய படங்கள் வரை யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், சூர்யா நடிக்கும் மாஸ் படத்தை அடுத்து எஸ்கேப் ஆர்ட்டிஸ் மதன் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். கதையெல்லாம் ஓகேவாகி விட்டது. ஆனால், படத்தில் நடிக்கும் ஹீரோ யார் என்பதே இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம். ஆனால் அதற்குள், கதை ஓகே என்றதும், அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரேம்ஜி நடிப்பார். இசை யுவன்ஷங்கர்ராஜாதான் என்று தனது கண்டிசனை முன்வைத்து விட்டாராம் வெங்கட்பிரபு.