பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
மறைந்து வரும் கிராமிய விளையாட்டுகளான கில்லி, பம்பரம், கோலி என்ற விளையாட்டுகளை மையமாக வைத்தும், அதனையே டைட்டிலாக வைத்தும் புதியவர்கள் இணைந்து ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார்கள். டி.மனோகரன் இயக்குகிறார். ஒய்.ஆர்.பிரசாத், நாககிருஷ்ணன் இசை அமைக்கிறார்கள், பி.சாய்சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரசாத், நரேஷ், தமிழ், சந்தோஷ் குமார் ஹீரோக்களாகவும், தீப்தி ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். வருகிற 9ந் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. கனவுகளை தொலைத்துவிட்டு கிராமத்திலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களின் பிரச்னையை காமெடியாகவும், யதார்த்தமாகவும் சொல்கிற படம்.