'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
அஜித், கௌதம் மேனன் முதன் முறையாக இணைந்த 'என்னை அறிந்தால்' படம் லாபமா, நஷ்டமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 'மங்காத்தா' படத்திற்குப் பிறகு அஜித் நடித்து வெளிவந்த “பில்லா 2, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால்' ஆகிய படங்களில் 'பில்லா 2' தோல்விப் படமாக அமைந்தது. 'ஆரம்பம், வீரம்' ஆகிய படங்கள் சுமாரான வெற்றிப் படங்களாகவும், 'என்னை அறிந்தால்' படம் அவற்றிற்கு கொஞ்சம் அதிகமான வெற்றிப் படமாகவும் அமைந்தது. 'ஆரம்பம், வீரம்' ஆகிய இரண்டு படங்களுமே வினியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை என திரையுலகில் சொல்கிறார்கள். ஆனால், 'என்னை அறிந்தால்' படம் தயாரிப்பாளருக்கு லாபத்தைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
படத்தின் வினியோகம், வெளி மாநில உரிமை, வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை, மற்ற உரிமைகள் என அனைத்தையும் விற்ற வகையில் 'என்னை அறிந்தால்' படம் மூலம் தயாரிப்பாளருக்கு சுமார் 10 கோடி வரை லாபம் கிடைத்திருக்கிறதாம். ஆனால், படத்தை எம்.ஜி. அடிப்படையில் வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள். அதே போல, 'என்னை அறிந்தால்' படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால், திரையரங்க வசூல் 100 கோடியைத் தாண்டவேயில்லை என்றும் சொல்கிறார்கள். மொத்தமாக சுமார் 70 கோடி வசூலைத் தாண்டியிருந்தாலே அதிகம் என்றும் சொல்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அனைவரும் சொல்லும் ஒரே விஷயம், படத்தின் வெளியீடு பொங்கலுக்கு இருந்திருந்தால், வசூல் நிலவரமே வேறாக இருந்திருக்கும் என்கிறார்கள்.
“லிங்கா, என்னை அறிந்தால், காக்கி சட்டை'' ஆகிய படங்கள் தவறான சமயங்களில் வெளி வந்து வியாபாரத்தை பாதித்தது என்பது உண்மைதான் என்கிறது வினியோக வட்டாரம்.